இன்று மாலை சூர்யா ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவரது ரசிகர்களுக்கு விருந்தாக நேற்று அவர் நடித்து வரும் 40வது படத்தின் டைட்டில் ‘எதற்கும் துணிந்தவன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பதும் அதனையடுத்து நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இன்று மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. அது என்னவெனில் சூர்யா நடித்துவரும் 39வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கி வரும் திரைப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் இன்று மாலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Watch out for the FIRST LOOK of #Suriya39 by 5PM today!#Suriya39FirstLook@Suriya_offl @tjgnan @prakashraaj @rajisha_vijayan @rajsekarpandian @srkathiir #Manikandan #LijoMolJose #RameshRao @RSeanRoldan @KKadhirr_artdir @philoedit @anbariv @kabilanchelliah pic.twitter.com/zYUFAPZE7y
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments