'சூர்யா 38' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில ஆண்டுகளாக தான் நடிக்கும் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த ஜிவி பிரகாஷ் தற்போது மீண்டும் பிரபலங்களின் படங்களுக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டு வருகிறார். பாலாவின் அடுத்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சூர்யாவின் 38வது படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைப்பதாக சமீபத்தில் அவரே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் 'சூர்யா 38' படத்தின் ஆடியோ குறித்த முக்கிய தகவலை நாளை அறிவிக்கவுள்ளதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். சூர்யாவின் 'என்.ஜி.கே' மற்றும் 'காப்பான்' படங்களின் அப்டேட்டுக்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஜிவி பிரகாஷின் இந்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
சூர்யாவின் 38வது படத்தை 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா இயக்கவுள்ளார் என்பதும், இந்த படம் நிஜ சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Will announce the first audio collaboration of #Suriya38 day after tomm ... ????????
— G.V.Prakash Kumar (@gvprakash) April 5, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments