சூர்யாவின் அடுத்த பட டைட்டில் இந்த மூன்றில் ஒன்றுதான்!

  • IndiaGlitz, [Wednesday,December 26 2018]

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு படமான 'சூர்யா 37' படத்தை பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி அதன்பின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்றை இயக்குனர் கே.வி.ஆனந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்த படத்திற்கு மூன்று டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் ரசிகர்கள் அதிகளவில் விரும்பும் டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்படும் என்று அறிவித்துள்ள கே.வி.ஆனந்த், 'மீட்பான்', 'காப்பான்', மற்றும் 'உயிர்கா' ஆகிய டைட்டில்களை அறிவித்துள்ளார். உயிர்கா என்றால் உயிரை காப்பவன் என்று அர்த்தமாம். இந்த படத்தில் சூர்யா, பிரதமரின் பாதுகாவலாராக நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் மூன்று டைட்டிலுமே பொருத்தமாக இருந்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் 'உயிர்கா' என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளனர். இதனையடுத்து இந்த டைட்டில் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.