ஆசீர்வதிக்கப்பட்ட 25 ஆண்டுகள்: வைரலாகும் சூர்யாவின் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யாவின் முதல் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆனதை அடுத்து சூர்யாவின் 25 வருடங்கள் திரைப்பயணம் குறித்து அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ’அழகான உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்ட 25 ஆண்டுகள் என்றும் கனவு காணுங்கள் நம்புங்கள் நிச்சயம் ஒரு நாள் அந்த கனவு நிறைவேறும்’ என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 1997 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் விஜய்யுடன் சூர்யா நடித்த ’நேருக்கு நேர்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தான் சூர்யா திரையுலகில் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் அவர் பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது திரையுலகில் 25 ஆண்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். சூர்யா தற்போது ’வணங்கான்’, ‘சூர்யா 42’ மற்றும் ’சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்றும் விரைவில் அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ’வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 25 ஆண்டுகளில் அவர் இதுவரை 40 படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் அவற்றில் பெரும்பாலானவை வெற்றி படம் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா தனது தந்தை சிவக்குமாருடன் மட்டுமின்றி விஜய், விஜயகாந்த், விக்ரம், உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். அதேபோல் இந்த 25 ஆண்டுகளில் மணிரத்னம், பாலா, ஏஆர் முருகதாஸ், கௌதம்மேனன், ஹரி, கே.எஸ்.ரவிகுமார், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல பிரபல இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Truly a beautiful and blessed 25years..! Dream and believe..!
— Suriya Sivakumar (@Suriya_offl) September 6, 2022
Your suriya.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com