close
Choose your channels

இன்று முதல் '24' படத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்

Saturday, May 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த '24' திரைப்படம் நேற்று வெளியாகி உலகம் முழுவதும் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளது. பெரும்பாலான ஊடகங்கள் இந்த படத்தை பாராட்டி விமர்சனங்கள் எழுதி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் கூறப்படும் ஒரே ஒரு சிறு குறையான படத்தின் நீளத்தை இன்று முதல் குறைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


இன்று முதல் '24' படத்தின் நீளம் கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் குறைக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இரண்டாவது பாதியில் 10 நிமிட காட்சிகள் குறைக்கப்படவுள்ளதாகவும், இதனால் படத்தின் விறுவிறுப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

'24' திரைப்படம் நேற்று முன் தினம் திரையிடப்பட்ட பிரிமியர் காட்சிகளிலும், நேற்றைய முதல்நாள் காட்சிகளிலும் நல்ல வசூல் செய்துள்ளதாகவும் இந்த படத்தின் பிரிமியர் மற்றும் முதல்நாள் வசூல் விபரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment