'சர்வைவர்' விஜயலட்சுமி வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்: நெட்டிசன்களின் வேற லெவல் கமெண்ட்ஸ்!

  • IndiaGlitz, [Tuesday,December 14 2021]

ஜீ டிவியில் ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய ’சர்வைவர்’ என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஞாயிறன்று நிறைவு பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தை நடிகை விஜயலட்சுமி வென்றார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி ’சர்வைவர்’ நிகழ்ச்சி குறித்தும் தனது சமீபத்திய புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது காலில் அதிக காயங்கள் உள்ளதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் எதுவும் ஈசியாக கிடைத்து விடாது என்றும் அவர் கேப்ஷனாக தெரிவித்து உள்ளார்.

’சர்வைவர்’ நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டத்தை விஜயலட்சுமி பெற்று ரூபாய் ஒரு கோடி பரிசு பெற்று இருந்தாலும் இந்த 90 நாட்களும் அவர் மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் ரொம்பவே கஷ்டப்பட்டார்கள் என்பதை இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு தெரியும்.

அந்த வகையில் காலில் படுகாயம் அடையும் அளவிற்கு கஷ்டப்பட்டாலும் டைட்டில் பட்டமும் ஒரு கோடி ரூபாயும் பரிசு பெற்ற விஜயலட்சுமிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் ஒரு கோடி ரூபாய் என்றால் சும்மாவா? கஷ்டப்பட்டால்தான் கிடைக்கும் என்றும் ஒரு சில நெட்டிசன்கள் வேற லெவல் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.