ஒரு பெரிய சம்பவம் நடந்துருக்கு: சர்வைவர் லேடிகேஷ் வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,October 06 2021]

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் என்ற நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான லேடிகேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: இன்னும் ஒரு சில நாட்களில் நிகழ்ச்சி முடிய போகிறது. நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகவில்லை. நானாகத்தான் வெளியேறுகிறேன். அதையும் தாண்டி ஒரு பெரிய சம்பவம் நடந்து உள்ளது. அதனால் நான் அனாவசியமாக விளையாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நான் மிகவும் வருத்தம் அடைகிறேன்.

அந்த சம்பவம் என்ன என்பதை ஒரு சில நாட்களில் என்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வேன். அதை அனைவரும் கவனமாக படித்துப் பார்த்து உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள். நான் எதையும் தைரியமாக சொல்லும் குணமுடையவர். எனக்கு யாருக்கும் பயம் இல்லை. எனக்கு என்னுடைய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பலர் தவறான விஷயங்களை வெளியே சொல்ல பயப்படுவார்கள். ஆனால் நான் துணிந்து சொல்ல போகிறேன். எனக்கு எப்பொழுதும் போல் ஆதரவு கொடுங்கள்’ என்று லேடிகேஷ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.