close
Choose your channels

'என்னுடைய காதலர் இவர் தான்: ரசிகர்களுக்கு அறிமுகம் செய்த 'சர்வைவர்' பிரபலம்!

Friday, September 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் ஒருவர் தன்னுடைய காதலர் இவர்தான் என தனது இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

ஜீ தமிழ் சேனலில் கடந்த ஆண்டு ‘சர்வைவர்’ என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பானது என்பதும் ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக நடிகை விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஐஸ்வர்யா கிருஷ்ணன். பிட்னஸ் டிரெய்னரான இவர் பல திரையுலக பிரபலங்களுக்கு பிட்னஸ் டிரெய்னராக பயிற்சி அளித்து வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி மாடலிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆயிரக்கணக்கானோர் ஃபாலோ செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலர் இவர்தான் என ஒரு அழகான இளைஞரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும் இன்று அவரது பிறந்த நாள் என்றும் கூறியுள்ள அவர் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் ஐஸ்வர்யா கிருஷ்ணருக்கு வாழ்த்து கூறியதோடு அவரது பாய் பிரண்டுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். விரைவில் ஐஸ்வர்யா கிருஷ்ணன் தனது திருமண தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment