சர்வைவர்: எலிமினேட் ஆன இருவர், ஆனால் அதிலும் ஒரு டுவிஸ்ட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் நேற்று இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டார்கள் என்பதும் ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
ஜீடிவியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் நேற்று முதல் எலிமினேட் நடந்தது. இதில் எலிமினேட் செய்யப்படுபவர் யார்? என்பது குறித்த கருத்துக்களை அணி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவித்தனர். வேடர் அணியில் பலவீனமானவர் என்று சிருஷ்டி டாங்கே பெயர் முன்வைக்கப்பட்டது. அவரால் தங்களது அணிக்கு எந்தவித உதவியும் இல்லை என்றும் அவர் வெளியேறுவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அணித்தலைவர் கூறினார். அதேபோல் காடர் அணையில் இந்திராஜா பலவீனமானவர் என அறிவிக்கப்படுகிறார். இதனை அடுத்து ஒருவருக்கொருவர் வாக்குவாதம் நடைபெறுகிறது
இதனை அடுத்து எலிமினேட் செய்யப்படுபவர் யார் என்பதை முடிவு செய்ய குடுவையில் பெயரை எழுதி வைக்கப்படுகிறது. இந்நிலையில் இரு அணி தலைவர்களும் அர்ஜுனை சந்திக்கின்றனர். அர்ஜுன் அவர்களிடம் நீங்கள் யாரை எலிமினேட் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டு ஓட்டளிக்குமாறு கேட்கிறார். இருவரும் தங்கள் அணியில் இருந்த ஒருவருக்கு ஓட்டளித்தனர்
இந்தநிலையில் குடுவையில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்ட போது வேடர் அணியில் பார்வதிக்கு 4 ஓட்டுக்கள் கிடைத்தது. அதேபோல் காடர் அணியில் ராமுக்கு 5 ஓட்டுக்கள் கிடைத்தது. இதனால் ராம், பார்வதி எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று தோன்றியது. ஆனால் அர்ஜுன் திடீரென ஒரு ட்விஸ்ட் வைத்து அதில் குடுவையில் உள்ள ஓட்டுக்களின் அடிப்படையில் எலிமினேட் இல்லை என்றும் அணித்தலைவர் யாரை எலிமினேட் செய்ய ஓட்டளித்தாரோ, அவர்தான் எலிமினேட் செய்யப்படுவார் என்றும் கூறினார். இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து அணித் தலைவரின் ஓட்டுகளின் படி சிருஷ்டி டாங்கே மற்றும் இந்திராஜா ஆகியோர் எலிமினேட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இருவரும் புலம்பி தள்ளினர். இந்த நிலையில் எலிமினேட் செய்யப்பட்ட இருவரும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென அவர்கள் இருவரும் வேறு ஒரு தீவில் விடப்பட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு இன்னும் போட்டி முடியவில்லை என்பது தெரிய வந்ததால் அவர்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்ததோடு நேற்றைய எபிசோடு முடிவடைந்தது. நாளுக்கு டுவிஸ்ட் மேல் டுவிஸ்டாக இருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com