சத்யராஜை அடிக்க ஏணி கேட்ட சுருளிராஜன்...
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனின் மனைவி தனது கணவரின் திரையுலக பயண வாழ்க்கை குறித்தும், அவர் மரணத்தை வைத்து தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்தும் Indiaglitz நேயர்களுக்கு அளித்துள்ளல் பிரத்யேக பேட்டி....
விவேகானந்தர் பிக்ச்ர் திருப்பூர் மணியால்தான் எங்கள் வீட்டிற்கு ஏசி வந்தது. அதுதான் முதல் ஏசி.
ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு வந்த என் கணவர், இன்று ஒரு சண்டை சீன எடுத்தோம், அதில் சத்யராஜ் என்பவரோடு சண்டை காட்சி. நான் டைரக்டரிடம், இவரை அடிக்க எனக்கு ஏணி வேண்டும் என்று கேட்டேன் என்று என்னிடம் சொன்னது இன்னும் நினைவில் உள்ளது. ஏனெனில் நடிகர் சத்யராஜ் ஆறடிக்கு மேல் இருப்பார்.
எனக்கு மூன்று பிள்ளைகள். நீங்கள் சினிமாவுக்கு ஏன் நடிக்க போகவில்லை என நானே அவர்களிடம் கேட்டுள்ளேன். அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா ? எங்கள் அப்பாவிற்கு சினிமாவில் நல்ல பெயர் இருக்கு, அதை கெடுக்க விரும்பவில்லை என்று சொன்னார்கள். எல்லாவற்றிக்கும் மேலாக அவர்களுக்கு விளையாட்டுத்துறையில் ஆர்வம். தென்னிந்திய அளவில் பதக்கங்களை பெற்றுள்ளார்கள்.
மாந்தோப்பு கிளியே என்ற படத்தில் வரும் கதா பாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. சிக்கனமாக இருக்கும் யாரையாவது குறிப்பிட இன்றும் மாந்தோப்பு படத்தில் சுருளிராஜன் நடித்த கதா பாத்திரத்தைத்தான் உதாரணத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.
அவருக்கு எப்போதும் வீட்டில் எல்லா உறவினர்களோடும் இருப்பது பிடிக்கும்.
என நடிகர் சுருளிராஜன் மனைவி, மருமகள் மற்றும் சுருளிராஜனின் மனைவியின் தங்களை அவர் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Mithra Anjali
Contact at support@indiaglitz.com