திட்டமிட்ட தேதிக்கு முன்பே ரிலீஸ் ஆகும் 'போகன்'

  • IndiaGlitz, [Thursday,January 26 2017]

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த 'போகன்' திரைப்படம் ஏற்கனவே சென்சாரில் 'யூ' சர்டிபிகேட் பெற்று வரும் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே.

ஆனால் தற்போது சூர்யாவின் 'சி3' திரைப்படம் பிப்ரவரி 9க்கு மாற்றப்பட்டுள்ளதை அடுத்து திட்டமிட்ட தேதிக்கு ஒருவாரம் முன்பே அதாவது பிப்ரவரி 2ஆம் தேதி வியாழக்கிழமை 'போகன்' ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜெயம் ரவி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ஜெயம் ரவி, அரவிந்தசாமி, ஹன்சிகா, அக்சரா கெளடா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரபுதேவா தயாரித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை லக்ஷ்மண் இயக்கியுள்ளார்.