லாரன்ஸ் ரசிகர்களுக்கு இன்று ஒரு இன்ப அதிர்ச்சி

  • IndiaGlitz, [Thursday,January 26 2017]

சமீபத்தில் முடிந்த மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பெரும் ஆதரவு கொடுத்த ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் மதிப்பும் மரியாதையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அவரது படம் குறித்த அறிவிப்பு ஒன்று அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வெளியாகியுள்ளது.

லாரன்ஸ் நடித்த 'சிவலிங்கா' திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு படமான 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பட்டாஸ்' படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இன்று வெளியாகவுள்ள டிரைலரையும் வரவேற்க அவரது ரசிகர்கள் தயாராகியுள்ளனர்.

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாய் ரமணி இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் என்பவர் இசையமைத்துள்ளார்.