சுர்ஜித் வெளியே வருவான்: மீட்புப் பையைத் தைக்கும் தாய்

  • IndiaGlitz, [Saturday,October 26 2019]

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டது. கடந்த இருபது மணி நேரமாக அந்த குழந்தையை காப்பாற்ற மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர். பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அந்த குழந்தை இன்னும் காப்பாற்ற முடியாத நிலையில் தற்போது தேசிய மீட்பு படையினர் அந்த குழந்தையை மீட்கும் பணியில் உள்ளனர்.

இந்த நிலையில் குழந்தை எப்படியும் காப்பாற்றப்படுவார் என்ற நம்பிக்கையை அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். குழந்தையின் பெற்றோர் நேற்று இரவு முதல் சாப்பிடாமல் தூங்காமல் குழந்தையை நினைத்து அழுது கொண்டே இருக்கின்றனர். நேற்று நள்ளிரவில் குழியில் இருந்த குழந்தையுடன் பெற்றோர்களும் அவருடைய உறவினர்களும் பேச்சு கொடுத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் குழந்தையை வெளியே எடுக்கும் முயற்சியில் உள்ள தேசிய மீட்புப்படையினர் ஒரு பை கேட்டனர். அந்த பையை வைத்து குழந்தையை மேலே தூக்கிவிடலாம் என்பதுதான் அவர்களது அடுத்த திட்டமாக இருந்தது. இதனையடுத்து தேசிய மீட்புப்படையினர் கேட்ட பையை தானே தைத்து தருவதாக கூறிய சுர்ஜித்தின் தாய் உடனே துணியை எடுத்து பை தைத்து கொடுத்தார். இந்த துணிப்பை தற்போது மீட்புபடையினர்களிடம் உள்ளதாகவும் குழந்தையை வெளியே தூக்கும்போது அந்த பையை அவர்கள் பயன்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.