சூர்யாவின் 'சி 3' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்

  • IndiaGlitz, [Tuesday,January 24 2017]

சூர்யா நடித்துள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' திரைப்படம் ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் வரும் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டு அதற்கான முன்பதிவும் தொடங்கியது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக தமிழக மக்களும், இளைஞர்களும் பெரும் உணர்ச்சி பெருக்கில் இருந்தனர். மேலும் நேற்று ஜல்லிக்கட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தபோதிலும் ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்கள் நடந்தன

எனவே 'சி3' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மீண்டும் ஒத்தி வைத்துள்ளனர். அனேகமான வரும் பிப்ரவரி 3ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

உங்க வயசுக்கு இதெல்லாம் தேவையா? பீட்டா ராதாராஜனை வெளுத்து வாங்கிய டிடி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்க மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என லட்சக்கணக்கானோர் தியாக உள்ளத்துடன் கடந்த ஒரு வாரமாக வெயில், மழை, குளிர் பாராமல் தன்னலம் கருதாமல் போராடினர்...

அரசுக்கு நீங்கள் யார் என்பது புரிந்து விட்டது. நடிகர் சிவகுமார்

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவாக இயற்றப்பட்டுவிட்டதால் மாணவர்களின் இத்தனை நாள் அறவழி போராட்டம் முழுவெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து மெரினாவில் உள்ள மாணவர்கள் போராட்டத்தை முடித்து கொண்டு வீட்டிற்கு செல்லுமாறு ஜல்லிகட்டு ஆர்வலர்கள், திரையுலகினர், வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட ī

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உறுதி செய்யும் அவசரச் சட்ட முன் வடிவு மசோதா சட்டமாக சற்று முன் நிறைவேற்றப்பட்டது. இதனால் இனிமேல் ஜல்லிகட்டு நடத்துவதற்கான தடை முற்றிலும் நீங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது...

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

சென்னை மெரீனா, மதுரை அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது...

பிரதமர், முதல்வரிடம் பேசியுள்ளேன். பொறுமை காக்கவும். கமல்ஹாசன்

ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நடந்து வரும் நிலையில் அவ்வப்போது தமது ஆதரவை போராட்டக்காரர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்ததோடு, போராட்டம் அறவழியில் சென்று கொண்டிருந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து வந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன் என்பது அனைவரும் அறிந்ததே...