சூர்யாவின் '24' டீசர் வெளியாகும் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,March 01 2016]

முதல்முறையாக மூன்று வேடங்களில் சூர்யா நடித்திருக்கும் டீசர் வெளியீடு மார்ச் முதல் வாரத்தில் வெளிவரும் என ஏற்கனவே சூர்யா, சமீபத்தில் நடைபெற்ற 'தோழா' இசை வெளியீட்டு விழாவில் உறுதி செய்த நிலையில் அவர் கூறியபடியே தற்போது '24' படத்தின் டீசர் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

விக்ரம்குமாரின் அதிரடி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடித்த '24' படத்தின் டீசர் வரும் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த டீசர் சுமார் ஒரு நிமிடத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும், படத்தின் ஆச்சரியப்படத்தக்க காட்சிகள் இந்த டீசரில் இணைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த காட்சிகளுக்கு மெருகூட்டும் வகையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.