சூர்யா-பாண்டிராஜ் படம் குறித்த முக்கிய தகவல்!

  • IndiaGlitz, [Monday,February 15 2021]

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சூர்யாவின் 40வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டி. இமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சமீபத்தில் கொரோனாவில் இருந்து குணமான சூர்யா இன்றைய பூஜையில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்றும் அதில் சூர்யா கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

More News

சிம்பு பட நாயகிக்கு கோவில் கட்டி தீபாரதனை காண்பித்த ரசிகர்கள்: வைரல் புகைப்படம்!

தமிழகத்தில் ஏற்கனவே குஷ்பு உள்ளிட்ட நடிகைகளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த ரசிகர்கள் தற்போது சிம்பு பட நாயகி ஒருவருக்கும் கோவில் கட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடி எதிர்ப்பு ஹேஷ்டேக்: ஓவியா மீது போலீஸ் புகார்?

பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு வருகை தந்து கோடிக்கணக்கான ரூபாய்க்கான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பது தெரிந்ததே. அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் ஒரு பக்கம் மோடியை

நான் மட்டும் தனியா இருக்கேன், நீ மட்டும் ஜாலியா இருந்தா நியாயமா? சிம்புவின் காதலர் தின வீடியோ!

நடிகர் சிம்பு காதலர் தினத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காமெடி வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

நாளை காலை ஒரு ஆச்சரிய அறிவிப்பு: 'மாஸ்டர்' மாளவிகாவின் வைரல் வீடியோ!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த மாளவிகா மோகனன் தற்போது தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்

காதலர் தினத்தை இப்படியும் கொண்டாடலாம்: சாக்சி அகர்வாலுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

காதலர் தினமான இன்று திரை உலக பிரபலங்களும் காதலர்களும் தங்களது ரொமான்ஸ் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே