சூர்யாவை 10 நாடுகளுக்கு அழைத்து செல்லும் இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,March 17 2018]

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கி வரும் 'NGK' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் முடிந்தவுடன் மீண்டும் தொடங்கி ஒருசில மாதங்களில் முடிந்துவிடும் என்றும், வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் சூர்யாவின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர்  கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை பார்த்தோம். 'அயன்' மற்றும் 'மாற்றான்' படத்திற்கு பின்னர் மீண்டும் இணையும் இந்த வெற்றிக்கூட்டணியின் படம் வரும் ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் உலகின் முக்கிய 10 நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவை எந்தெந்த நாடுகள் என்ற ஆலோசனை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.