'சூர்யா 37' டைட்டில் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,December 31 2018]


நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' படத்தின் டைட்டிலை ரசிகர்களே முடிவு செய்யும் வகையில் சமீபத்தில் டுவிட்டரில் மூன்று டைட்டில்கள் அறிவிக்கப்பட்டது. இதில் ரசிகர்கள் 'உயிர்கா' என்ற டைட்டிலை தேர்வு செய்தார்கள் என்பதும், இந்த டைட்டிலை வரும் புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருப்பதாக இயக்குனர் கே.வி.ஆனந்த் தெரிவித்திருந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் 'சூர்யா 37' டைட்டில் ரிலீஸ் ஆகும் நேரம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஜனவரி 1ஆம் தேதி சரியாக 12.00 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கப்படவுள்ளதை அடுத்து, அடுத்த பத்து நிமிடத்தில் அதாவது 12.10க்கு 'சூர்யா 37' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது.

சூர்யா நடித்து வரும் இன்னொரு படமான 'என்.ஜி.கே. படத்தின் அப்டேட் வரும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைந்துள்ள சூர்யாவின் ரசிகர்களுக்கு 'சூர்யா 37' படத்தின் அப்டேட் நிச்சயம் புத்தாண்டின் மகிழ்ச்சியான செய்தியாகவே கருதப்படுகிறது.

சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். லைகாவின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் 2019ஆம் ஆண்டின் மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்று ஆகும்

More News

அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியுடன் புதிய 'பேட்ட' போஸ்டர்

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாகவிருப்பது தெரிந்த நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக கூறப்பட்டு அதற்கான முன்பதிவுகளும் ஆரம்பமானது

நடிகர் விஷால் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

நடிகரும், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

முடிந்தது ஒரு வருடம்: கட்சி ஆரம்பிக்க ரஜினி தாமதம் செய்வது ஏன்? பழ கருப்பையா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாகவும், ஆன்மீக அரசியலில் ஈடுபடவிருப்பதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாகவும்

'விஸ்வாசம்' படத்தை புரமோஷன் செய்யும் 'பேட்ட' பட நிறுவனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படமும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி ஒரே நாளில் வெளியாகிறது.

விஸ்வாசம்' டிரைலருக்கு வாழ்த்து கூறிய 'விஜய் 63' தயாரிப்பாளர்

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வாசம் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பல சாதனைகளை தகர்த்து ஒரு கோடிக்கும் மேல் பார்வையாளர்களையும் ஒரு மில்லியனுக்கும் மேல் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது