'சூர்யா 36' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட எஸ்.ஆர்.பிரபு

  • IndiaGlitz, [Tuesday,February 27 2018]

சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிலையில் அவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பிடன் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில்  இந்த படத்தை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இந்த படத்தின் டைட்டிலை வரும் மார்ச் மாதம் 5ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

வரும் மார்ச் 5ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட்லுக் வெளியிடப்படும் என்று எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

சூர்யா 36 திரைப்படத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் , சாய் பல்லவி மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் நடித்து வருகின்'றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், R.K.விஜயமுருகன் கலை இயக்கமும், G.K.பிரசன்னா படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

More News

என்பார்மிங் முடிந்தது: துபாய் விமான நிலையத்தில் ஸ்ரீதேவி உடல்

துபாயில் மரணம் அடைந்த ஸ்ரீதேவி உடல் துபாய் போலீசாரின் அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் முடிந்துவிட்ட நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கவுதமி சம்பள பாக்கி குறித்து கமல் கருத்து

கமல்ஹாசன் நடித்த தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாகவும், அதற்கான சம்பளத்தை கமல்ஹாசனின் நிறுவனம் தனக்கு தரவில்லை என்றும் சமீபத்தில் கவுதமி புகார் கூறியிருந்தார்.

ரஷ்ய தொழிலதிபருடன் ரஜினி-விஜய் நாயகிக்கு திருமணம்

பிரபல தென்னிந்திய நடிகையும், ரஜினி, விஜய், தனுஷ் உள்பட முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டவருமான நடிகை ஸ்ரேயாவுக்கு வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. அவருக்கு நமது அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்

ஸ்ரீதேவி மரணம் குறித்து சந்தேகம் எழுப்பும் சுவாமி

ஸ்ரீதேவி மரணம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதியா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

நடிகர் விஷால் அமெரிக்காவின் கலிபோர்னியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு எந்தவிதமான நோய் என்பது தெரியவில்லை என்றும் பல்வேறு வதந்திகள் இணையதளங்களில் கடந்த சிலநாட்களாக பரவி வந்தது