தோனி படக்குழுவுக்கு சூர்யா பாராட்டு

  • IndiaGlitz, [Saturday,October 01 2016]

கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் தோனி தான் ஒரு சூர்யாவின் ரசிகர் என்று கூறியதோடு சமீபத்தில் சென்னை வந்தபோது, சூர்யாவின் குழந்தைகளிடம் அன்புடன் உரையாடினார் என்பதை பார்த்தோம். தனக்கு தோனி ரசிகர் என்பதை அறிந்த சூர்யா அவருக்கு நன்றி கூறியதோடு, தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று 'தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' திரைப்படம் வெளியானது. இந்த படத்தை முதல் நாளிலே பார்த்த சூர்யா, தோனி படக்குழுவினர்களுக்கு தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக தோனி கேரக்டரில் நடித்த சுசாந்த்தின் நடிப்பை அவர் வெகுவாக புகழ்ந்துள்ளார்

மேலும் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தை புத்திசாலித்தனமாக உருவாக்கிய படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதாகவும், சாதனை மன்னன் தோனிக்கு ஒரு சல்யூட் என்றும் சூர்யா கூறியுள்ளார்.

More News

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் சிறப்பு கட்டுரை

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற நடிகர், ஒப்பற்ற கலைஞர் என்று போற்றபடும் செவாலியே சிவாஜி கணேசனுக்கு இன்று பிறந்த நாள்.

வெங்கட்பிரபுவின் 'சென்னை 600028 II' படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியீடு தேதி

கடந்த 2007ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் முதல் படமான 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகமான 'சென்னை 600028 II' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது

'பாகுபலி 2' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி. அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது

தனுஷின் 'கொடி' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

தனுஷ் நடித்த 'தொடரி' சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான 'கொடி' திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா வெளியிட்ட தந்திரமான ஃபர்ஸ்ட்லுக்

மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் அறிமுகமான நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தை 'ஜெயம்கொண்டான்'...