close
Choose your channels

இசைத்துறையில் காலடி எடுத்து வைக்கும் சூர்யா

Tuesday, March 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சூர்யா, நடிப்பு மட்டுமின்றி 2D எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் தரமான திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த '36 வயதினிலே', 'பசங்க 2' ஆகிய இரண்டு தரமான படங்களாகவும், '24' திரைப்படம் மாஸ் படமாகவும் அமைந்தது.

இந்நிலையில் தற்போது இந்நிறுவனம் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'மகளிர் மட்டும்' என்ற படத்தை தயாரித்து வருகிறது.


தேசிய விருது பெற்ற படமான 'குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிப்பு, தயாரிப்பு ஆகியவற்றை அடுத்து சூர்யா தற்போது '2D மியூசிக்' என்ற இசை நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் 'மகளிர் மட்டும்' படத்தின் இசை உரிமையை முதன்முதலில் பெற்றுள்ளது. நாளை உலக மகளிர் தினத்தை ஒட்டி இந்த படத்தின் 'அடி வாடி திமிரா' என்ற பாடலை அதிகாலை 12.00 மணிக்கு வெளியிட 2D மியூசிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சூர்யாவின் புதிய இசை நிறுவனத்திற்கு நமது நல்வாழ்த்துக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment