தேர்தல் பிரச்சாரத்தில் ரஜினியுடன் இணைந்த சூர்யா

  • IndiaGlitz, [Sunday,March 06 2016]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்த வரிசையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டு வரும் சினிமா வசனங்களின் மீமிஸ்கள் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

ரஜினியின் சூப்பர் ஹிட் பாட்ஷா வசனமான ' என் பேரு மாணிக்கம்..எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற வசனத்தை கொஞ்சம் மாற்றி அமைத்து ஐயா என் பெரு மாணிக்கம்... எனக்கு வாக்காளர் பட்டியலில் இன்னோரு பெயர் இருக்கு...” என்று கூறி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சரி பாருங்கள் என்ற டைட்டிலுடன் ஒரு விளம்பரம் தயாராகியுள்ளது.

அதேபோல் சூர்யாவின் சூப்பர் ஹிட் சிங்கம் வசனமும் ' உன்னோட பெயரை நோட்டிஸ் போர்ட்ல பாத்திருப்ப..நீயூஸ் பேப்பர்ல பாத்திருப்ப..பத்திரிகையில பாத்திருப்ப...ஏன் விசிட்டிங் கார்ட்ல கூட பாத்திருப்ப...ஆனா வாக்காளர் பட்டியல்ல இருக்கான்னு பாத்தியா...? என்ற ஒரு விளம்பரமும் வெளிவந்து இணையத்தை கலக்கி வருகிறது.

மேலும் நடிகர் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களையும் தேர்தல் ஆணையம் இந்த விளம்பரத்திற்கு பயன்படுத்தி வருகிறது. தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் விளம்பரம் ஒன்றும் இணையத்தில் புகழ் பெற்று வருகிறது. வாக்காளர்களை குறிப்பாக இளம் வாக்காளர்களை கவர தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வரும் தேர்தலில் வாக்குப்பதிவின் சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.