மலேசிய பத்திரிகைக்கு மறுப்பு தெரிவித்த சூர்யா
Friday, May 20, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
மலேசியாவில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் 'மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சூர்யா லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து சூர்யா மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது: மலேசியா தமிழ் பத்திரிகையில் எனக்கே தெரியாத என்னை பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 'மகா இந்து இளைஞர் ஒற்றுமை விழா' என்ற மதம் சார்ந்த நிகழ்வு நடைபெற இருப்பதாகவும், அதில் நான் கலந்துகொள்ள லட்சக்கணக்கில் பணம் கேட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இச்செய்தி பலரால் பகிரப்படுகிறது.
இப்படி ஒரு நிகழ்ச்சியை பற்றிய தகவல்கூட எனக்கு தெரியாது. கலந்துகொள்ளும்படி யாரும் என்னை அணுகவும் இல்லை. கலைஞர்கள் சாதி, மதம், மொழி போன்ற எல்லா எல்லைகளையும் கடந்தவர்கள். கலைத்துறையில் இருக்கிற நான் மதம் தொடர்பாக நடக்கிற ஒரு நிகழ்வில் நிச்சயம் கலந்து கொள்ள சம்மதித்து இருக்க மாட்டேன்.
சமூக வளர்ச்சி, மாற்றம், விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வுகளில் ஆர்வமாக கலந்து கொள்கிற நான், அதற்காக எப்போதும் பணம் பெற்றதில்லை. பணம் வாங்கிக்கொண்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளக்கூடாது என்கிற கொள்கை உடையவன் நான். அப்படி இருக்க ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் பணம் கேட்டதாக வந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை.
மலேசியாவில் நடைபெறுவதாக சொல்லப்படும் 'மகா இந்து இளைஞர் ஒற்றுமை விழாவிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. விழா அமைப்பினர் என் பெயரை தவறாக பயன்படுத்தினால் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து கொள்கிறேன்.
இதுபோன்ற செய்திகள் அடிக்கடி வருவது வருத்தமளிக்கிறது. என் மீது அன்புகொண்ட அனைவருக்கும் என் வேண்டுகோள். இனி இதுபோன்ற தவறான நோக்கத்தோடு இடம்பெறும் செய்திகளைப் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய நல்ல முயற்சிக்கு ஆதரவளித்து தொடர்ந்து எனக்கு துணை நிற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சூர்யா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments