சூர்யாவின் 'S3' ஆடியோ ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Tuesday,June 14 2016]

சூர்யா, சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான '24' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றதை அடுத்து சூர்யாவின் அடுத்த படமான 'S3' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், பாடல்கள் கம்போஸ் செய்யும் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருவதாகவும் அவர் இந்த பணியை ஜூலை முதல் வாரத்திற்குள் முடித்துவிடுவார் என்றும் இந்த படத்தின் இசை வெளியீடு ஜூலை 2வது வாரம் வெளிவர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வரும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.