சூர்யாவின் 'சிங்கம் 3' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Monday,September 19 2016]

சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களின் வெற்றிகளை அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'எஸ் 3'. சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்த படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த படம் டிசம்பரில்தான் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் அறிவிக்கவுள்ளது. இந்த தகவலை இந்நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் டீசர் ரிலீஸ் தேதியும் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.