சூர்யா-செல்வராகவன் 'NGK' படத்தின் புதிய அப்டேட்

  • IndiaGlitz, [Saturday,April 21 2018]

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் 'NGK' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையில், சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.