சூர்யாவின் '24'க்கு கிடைத்த முதல் வெற்றி

  • IndiaGlitz, [Friday,May 06 2016]

சூர்யா மூன்று வேடங்களில் நடித்த '24' திரைப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் 2000க்கும் அதிகமான திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நேற்று அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பிரிமியர் காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த காட்சிகளை பார்த்தவர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்து வருவதால் இந்த படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சூர்யாவின் 24 படத்திற்கு முதல் வெற்றிச்செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைத்துள்ளது. இந்த செய்தி ஒரு தயாரிப்பாளராக சூர்யாவுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது என்பதோடு, இந்த படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
தமிழின் வித்தியாசமான முயற்சியாக ஹாலிவுட் தரத்தில், ஏ.ஆர். ரஹ்மானின் அபாரமான பின்னணி இசையில், விக்ரம்குமாரின் தேர்ந்த இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

More News

ரஜினியை மிஞ்சிய தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே வேகம் என்று இன்னொரு அர்த்தம் கொள்ளும் அளவிற்கு அவரது ஒவ்வொரு செயலிலும் மின்னல் வேகம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே...

'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்'. இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

கடந்த ஆண்டு விஷ்ணு நடித்த 'இன்று நேற்று நாளை' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது ஒரே நேரத்தில்...

விஜய்சேதுபதி-டி.ராஜேந்தர் படத்தின் ஹீரோயின் இவர்தான்....

தனுஷ் நடித்த 'அனேகன்' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கே.வி.ஆனந்த் அடுத்ததாக இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி...

எஸ்.எஸ்.ராஜமவுலியின் உதவி இயக்குனராகிறார் நானி?

'பாகுபலி' இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தான் இயக்கும் ஒருசில படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டும் தோன்றுவார் என்பது அனைவரும் அறிந்ததே...

ஜெயம் ரவியின் 25வது படம் குறித்து மோகன் ராஜா

தனி ஒருவன்' படத்தை அடுத்து இயக்குனர் மோகன் ராஜா, தற்போது சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் உள்பட பலர் நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார்...