சூர்யாவின் '24' படத்தின் சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,May 09 2016]

சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடிப்பில் விக்ரம்குமார் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான '24' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக உலகம் முழுவதும் ஓடி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இந்த படம் செய்த வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மே 6 முதல் 8 வரையிலான மூன்று நாட்களில் சென்னையில் '24' திரைப்படம் 21 திரையரங்குகளில் 333 காட்சிகள் திரையிடப்பட்டன. கிட்டத்தட்ட 95% திரையரங்குகள் நிரம்பியுள்ள நிலையில் மேற்கண்ட மூன்று நாட்களில் இந்த படம் ரூ.1,62,79,725 வசூல் செய்துள்ளது.
இந்த படத்தின் தமிழ்நாடு, தெலுங்கு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளின் வசூல் குறித்த தகவல்கள் விரைவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.