சூர்யாவின் சிங்கம் 3' டீசர் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Saturday,September 03 2016]

இளையதளபதி விஜய்யின் 'விஜய் 60' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவரவுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் இருக்கும் நிலையில், சூர்யாவின் ரசிகர்களும் உற்சாகப்படும் அளவிற்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே இரண்டு பாகங்களில் மிரட்டிய துரைசிங்கத்தின் டீசர், செப்டம்பர் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது என்ற தகவல் சற்று முன் கிடைத்துள்ளது.
சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

More News

'விஜய் 60' பர்ஸ்ட்லுக் குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் 'பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் ரிலீஸ் குறித்த செய்தி நேற்று மாலை முதல் சமூக இணையதளங்களை...

பிரபல நடிகை விவாகரத்து

காவ்யா, மஞ்சு, லிசி, அமலாபால் மற்றும் திவ்யா உண்ணி என வரிசையாக மலையாள நடிகைகள் தங்கள் கணவர்களை விவாகரத்து செய்து வரும் நிலையில்...

இளையதளபதியின் 'விஜய் 60' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி. அதிகாரபூர்வ அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் டைட்டில் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய...

'தர்மதுரை' இயக்குனருக்கு சிவகுமார் எழுதிய நெகிழ்ச்சியான கடிதம்

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு பல கோலிவுட் பிரபலங்கள் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்...

சூப்பர் ஹிட் ஆன படத்தின் 2ஆம் பாகத்தில் அரவிந்தசாமி?

தனி ஒருவன்' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன நடிகர் அரவிந்தசாமி தற்போது ஜெயம் ரவி நடிக்கும் 'போகன்' படத்தில் நடித்து வருகிறார்...