சூர்யாவின் 'எஸ் 3' டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,October 28 2016]

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம்' படத்தின் 3ஆம் பாகமான 'எஸ் 3' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
38 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த டீசரில் அசத்தலான கிராபிகஸ் காட்சிகளை அடுத்து சூர்யாவின் கம்பீரமான போலீஸ் உடையுடன் கூடிய தோற்றம் காட்சி அளிக்கின்றது.
மேலும் இந்த படத்தின் டீசர் வரும் நவம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி விருந்தாக சூர்யா ரசிகர்களுக்காக வெளியாகியுள்ள இந்த டீசர் பெரும் வரவேற்பை சமூக இணையதளங்களில் பெற்று வருகிறது.