விஜய்யின் 'புலி'யுடன் கனெக்சன் ஆன சூர்யாவின் 'S 3'

  • IndiaGlitz, [Monday,September 26 2016]

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'S 3' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வரும் டிசம்பர் 16ஆம் தேதி வெளிவரவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதத்திற்குள் முற்றிலும் முடிக்க படக்குழுவினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 'S 3' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தற்போது ஆந்திராவில் உள்ள தலக்கோணம் காட்டுப்பகுதியில் நடைபெற்று வருகிறது. அதிரடி சண்டைக்காட்சிகள் அடங்கிய இந்த படப்பிடிப்பில் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்கள் சூர்யாவுடன் நடித்து வருகின்றனர். இதே தலக்கோணத்தின் காட்டுப்பகுதியில்தான் விஜய் நடித்த 'புலி' படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.