சூர்யாவின் ஜெய்பீம்....! உண்மையான வழக்கின் தழுவலா....?

  • IndiaGlitz, [Saturday,July 31 2021]

கூட்டத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தின் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் தான் நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்தை இயக்கி வருகிறார். சூர்யாவின் பிறந்தநாளன்று இத்திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டது. சான் ரோல்டன் படத்திற்கு இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் போஸ்டரின் சூர்யா வழக்கறிஞராக காட்சியளிக்கிறார். இருளர், பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடக்கூடிய வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் முழுவதுமாக முடிந்ததாகவும் கூறப்பட்டது. தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரோடக்சன் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் கூறியது.

இந்நிலையில் நீதியரசர் சந்துரு என்ற வழக்கறிஞர் தான் பணியாற்றியபோது, வாதாடப்பட்ட முக்கிய வழக்கை மையமாக வைத்து ஜெய்பீம் படத்தின் கதை எழுதப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.