ஹன்சிகாவை அடுத்து சி.வி.குமாருடன் இணைந்த சூர்யா

  • IndiaGlitz, [Tuesday,August 02 2016]

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கி முடித்துள்ள படம் 'மாயவன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை சமீபத்தில் நடிகை ஹன்சிகா வெளியிட்டார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டீசரை நடிகர் சூர்யா வெளியிடவுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் படமாக அமைந்துள்ள 'மாயவன்' படத்தில் சந்தீப் கிஷான், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கிஷெராப், ஜெயப்பிரகாஷ், அக்சரா கவுடா, மிமிகோபி, பவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவும், லியோ ஜான் பால் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை சி.வி.குமார் மற்றும் ஞானவேல்ராஜா இணைந்து தயாரித்துள்ளனர்.

More News

மலேசியாவில் 'கபாலி' செய்த முதல் சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது...

மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட சூர்யா-கவுதம் மேனன்

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடித்த 'காக்க காக்க 'திரைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு...

தீபாவளிக்கு வெளிவருகிறது 'மகிழ்ச்சி' மற்றும் 'நெருப்புடா'

தமிழ் வார்த்தைகளான மகிழ்ச்சி மற்றும் நெருப்பு ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உச்சரிக்காமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை...

ஏ.ஆர்.ரஹ்மானின் அடுத்த படத்தில் 9 பாடல்கள்

'மின்சார கனவு', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன், தற்போது இயக்கவுள்ள புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ள செய்தியையும், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்...

மிஷ்கின் - ராம் இணைந்த 'சவரக்கத்தி' சிங்கிள் ரிலீஸ் தேதி

பிரபல இயக்குனர்கள் மிஷ்கின், ராம் ஆகிய இருவரும் இணைந்த படமான 'சவரக்கத்தி' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...