கவுதம் மேனனுக்கு எதிராக அறிக்கை விட்டது தவறுதான். சூர்யா

  • IndiaGlitz, [Monday,January 02 2017]

நடிகர் சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய படம் கவுதம் மேனனின் 'காக்க காக்க'. மேலும் அவரது நடிப்பு உச்சத்தை தொட்ட படம் 'வாரணம் ஆயிரம்'. இந்த இரண்டு வெற்றி படங்களை இயக்கிய பின்னர் மீண்டும் சூர்யா-கவுதம் மேனன் 'துருவ நட்சத்திரம்' என்ற படத்தின் மூலம் இணையவுள்ளதாக கடந்த 2013ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராத காரணத்தால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இந்த படம் டிராப் ஆனது. இந்த டிராப் செய்தியை சூர்யா ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த சூர்யா, 'அந்த அறிக்கை தேவையில்லாதது என்றும் அறிக்கை முடிவை எடுத்திருக்க வேண்டாம் என்பதை அன்றைய மாலையே தான் உணர்ந்ததாகவும், ஆனால் நேரம் தாண்டிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தற்போது ஹாரீஸ் ஜெயராஜ் உதவியால் மீண்டும் இருவரும் மனம் விட்டு பேசியுள்ளதாகவும், விரைவில் கவுதம் மேனனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அந்த பேட்டியில் சூர்யா தெரிவித்தார்.