கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் மடியில் விளையாடி இருக்கிறேன். சூர்யா
Send us your feedback to audioarticles@vaarta.com
பழம்பெரும் திரைப்பட இயக்குனர்களான கிருஷ்ணன்பஞ்சு அவர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏவிஎம் குமரன், சிவகுமார், சூர்யா, குட்டி பத்மினி, குகநாதன், விக்ரமன், கே.பாக்யராஜ், மகேந்திரன், பி.வாசு, சசி, எம்.என்.ராஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர்களின் மடியில் விளையாடிய மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தார். அவர் கூறியதாவது:
உலகில் உள்ள சினிமா படம் எடுக்கும் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போது நான் என்ன செய்தேன்? என்ற கேள்விதான் என்னுள் எழுகிறது. அதுமட்டுமின்றி, கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் மடியில் விளையாடி இருக்கிறேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர்களை போலவே அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும், நல்ல மனிதராக இருக்க வேண்டும் போன்ற சமுதாயத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
எம்.ஜி.ஆர் நடித்த முதல் படமான 'சதிலீலாவதி' படம் தான் கிருஷ்ணன் பஞ்சு இணைந்து பணிபுரிந்த முதல் படம். அதே போல் சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான 'பராசக்தி' படத்தை இயக்கியது இதே இரட்டையர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments