சூர்யாவின் 'பசங்க 2' படத்தை அடுத்து '24' படப்பிடிப்பும் முடிந்தது

  • IndiaGlitz, [Tuesday,September 22 2015]

'அஞ்சான்', 'மாஸ்' படங்களை அடுத்து சூர்யா ஒரே நேரத்தில் 'பசங்க 2' மற்றும் '24' ஆகிய படங்களில் நடித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாண்டியராஜின் 'பசங்க 2' படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது '24' படத்தின் படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது.

'யாவரும் நலம்', 'மனம்' போன்ற படங்களை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகி வந்த '24' திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெரும்பாலும் படமாக்கப்பட்டது. பின்னர் படக்குழுவினர் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தினர். கடைசியாக போலந்து நாட்டில் பாடல் மற்றும் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. '24' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்த படம் கிராபிக்ஸ் குழுவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 2016ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, சமந்தா, நித்யாமேனன், அஜய், சத்யன், சரண்யா, மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் சூர்யாவின் 2D நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் '24' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட சூர்யா, அடுத்த சில நாட்களில் ஹரியின் இயக்கத்தில் உருவாகவுள்ள 'சிங்கம் 3' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பும் வெளிநாட்டில்தான் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தனி ஒருவன்' தயாரிப்பு நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை

சமீபத்தில் வெளியான கோலிவுட் திரைப்படங்களில் எதிர்பாராத மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் 'தனி ஒருவன்' என்பதை யாராலும் மறுக்க முடியாது...

இளையதளபதியுடன் இணைந்த பிரபல நடிகையின் மகள்

தமிழ், தெலுங்கு, இந்தி என முக்கிய மொழிகளில் இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில்...

அஜீத்தின் அனல் பறக்கும் பஞ்ச் வசனங்கள். ஒரு பார்வை

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கப்படும் அஜீத்தின் வசன உச்சரிப்பே மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்கும். அதிலும் அவர் பேசும் பஞ்ச் வசனங்கள் அதிர வைக்கும்...

திருப்பூர் சுப்பிரமணியன் தலையீட்டால் முடிவுக்கு வந்த லிங்கா பிரச்சனை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு தரவேண்டும் என ஒருசில விநியோகிஸ்தர்கள்...

நியூசிலாந்தில் 'புலி' செய்த சாதனை

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது என்பது அனைவரும் அறிந்ததே...