close
Choose your channels

பாண்டியராஜின் 'ஹைக்கூ' படத்தின் புதிய டைட்டில்?

Friday, August 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாண்டியராஜ் இயக்கியுள்ள 'ஹைக்கூ' திரைப்படத்தின் பெயரை தமிழில் மாற்றுவதற்கு சிறந்த டைட்டில்களை தனக்கு பரிந்துரை செய்யுமாறு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் பாண்டியராஜ் ரசிகர்களின் உதவியை சமூகவலைத்தளம் மூலம் கோரியிருந்தார். இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

தினந்தோறும் ஏகப்பட்ட டைட்டில்கள் இந்த படத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டு வருவதாகவும், பரிந்துரை செய்த அனைவருக்கும் தனது சமூக வலைத்தளம் மூலம் நன்றி தெரிவித்து கொண்ட பாண்டியராஜ், விரைவில் இசை வெளியீட்டு விழா தேதியினை அறிவிக்க உள்ளதாகவும், அன்றைய தினம் இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மழலை, மழலைப்பட்டாளம், இளந்தளிர்கள், பூக்கல், கவிதைகள், குட்டிப்பசங்க, பசங்க 2 இவையெல்லாம் ரசிகர்கள் பாண்டியராஜ் அவர்களுக்கு பரிந்துரை செய்த டைட்டில்களில் ஒருசில என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் எந்த பெயரை பாண்டியராஜ் தேர்வு செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

சூர்யா, அமலாபால், பிந்துமாதவி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment