close
Choose your channels

சூர்யாவின் அடுத்த இயக்குனர் முத்தையா ஓர் பா.ரஞ்சித் ? ஞானவேல்ராஜா விளக்கம்

Tuesday, July 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹரி இயக்கத்தில் சூர்யா தற்போது சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் மற்றும் அனுஷ்கா நாயகிகளாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் 'கபாலி' இயக்குனர் பா.ரஞ்சித், சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் 'கொம்பன், மருது, உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய முத்தையா சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து ஞானவேல்ராஜா தற்போது விளக்கம் அளித்துள்ளார். 'இயக்குனர் முத்தையா எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பது உண்மையே. தற்போது கதை விவாதம் நடைபெற்று வருகிறது. கதை தயாரானதும் இந்த படத்தின் ஹீரோவை இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் கலந்து முடிவு செய்வோம். சூர்யா உள்பட இன்னும் யாரையும் ஹீரோவாக கமிட் செய்யவில்லை' என்று கூறியுள்ளார். எனவே சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் முத்தையா அல்லது ரஞ்சித் இவர்களில் யார்? என்பதை சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment