வெப்தொடரில் நடிக்கும் சூர்யா: டைட்டில் இயக்குனர் குறித்த தகவல்கள்

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் லாக்டவுன் முடிந்தவுடன் இந்த திரைப்படம் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ’அருவா’ என்ற திரைப்படத்திலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் வெப்தொடர் ஒன்றில் சூர்யா நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த தொடரில் நடிக்கவிருக்கும் சூர்யாவின் சம்பளம் முழுவதையும் அனாதை இல்லங்களுக்கு நிதியாக கொடுத்த சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சூர்யா நடிக்கவிருக்கும் வெப்தொடரின் டைட்டில் ’நவரசா’ என்று வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒன்பது எபிசோடுகளை கொண்ட இந்த தொடரை 9 இயக்குனர்கள் இயக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அதில் ஒரு எபிசோடை மணிரத்தினம் இயக்கவுள்ளார் என்பதும், நடிகர்கள் சித்தார்த் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர்களும் இந்த தொடரின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யாவின் பகுதியை இயக்கவிருப்பது ஜெயேந்திர பஞ்சாபிகேஷன் என்ற தகவல் கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு சித்தார்த், பிரியா ஆனந்த், நித்யா மேனன் நடித்த ’180’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.