சூர்யா, கார்த்தி, யுவன் என்னுடைய வகுப்பு தோழர்கள். சொல்வது ஒரு சூப்பர் ஸ்டார்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருப்பவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. அதேபோ இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் அவதாரத்தில் கோலிவுட்டில் நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர் யுவன்ஷங்கர் ராஜா. இவர்கள் மூவரும் சிறுவயது தோழர்கள் மற்றும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பது பலருக்கு தெரிந்திருக்கும்
இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவும் இவர்களது வகுப்பு தோழர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் 'ஸ்பைடர்' படம் குறித்து சமீபத்தில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மகேஷ்பாபு, 'சூர்யா, கார்த்தி மற்றும் யுவன் ஆகியோர் தன்னுடைய வகுப்பு தோழர்கள் என்று குறிப்பிட்டார். ஆனால் அதே நேரத்தில் நான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மகன் என்று அப்போது சூர்யா, கார்த்தி உள்பட எனது வகுப்பு தோழர்கள் யாருக்கும் தெரியாது என்றும் அப்படி கூறிக்கொள்வதை தான் விரும்பியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தான் 15 வருடங்களுக்கு முன்புதான் ஐதராபாத் சென்றதாகவும், தனது பள்ளிப்படிப்பு சென்னை செயின்ட் பீட்ஸ் பள்ளியில் படித்ததாகவும், கல்லூரி படிப்பை லயோலா கல்லூரியில் படித்ததாகவும் கூறினார். மேலும் எனது பள்ளிப்பருவத்தில் நான் பார்த்து வியந்த ஒரு படம் 'தளபதி. அந்த படத்தில் சந்தோஷ் சிவன் சாரின் ஒளிப்பதைவை கண்டு பிரமித்தேன். அப்படிப்பட்ட மேதை இன்று எனது 'ஸ்பைடர்' படத்தில் ஒளிப்பதிவு செய்வது நான் பெற்ற அதிர்ஷ்டம்' என்றும் மகேஷ்பாபு தனது பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com