close
Choose your channels

ஆர்யாவுக்காக இணையும் சூர்யா-கார்த்தி-விஷால்

Thursday, October 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஆர்யா, திறமையான நடிகராக இருந்தபோதிலும் கடந்த சில வருடங்களாக அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் ஆர்யா தனது உடல் எடையை அதிகரித்து கஷ்டப்பட்டு நடித்து வரும் படம் 'கடம்பன்'. பழங்குடி இன கேரக்டரில் ஆர்யா நடித்துள்ள இந்த படத்தை 'மஞ்சப்பை' இயக்குனர் ராகவன் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் 'கடம்பன்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது இந்த டீசரை சூர்யா, விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.
ஆர்யா, கேதரின் தெரசா, மதுவந்தி, ஒய்.ஜி.மகேந்திரா, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment