'காக்க காக்க 2' எப்போது? வெளிவராத தகவல்

  • IndiaGlitz, [Saturday,September 24 2016]

சூர்யா, ஜோதிகா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த போலீஸ் த்ரில்லர் படம் 'காக்க காக்க'. பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு 'தெறி' மற்றும் 'கபாலி' என்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, 'காக்க காக்க 2' படத்தை தயாரிக்க முன்வந்திருப்பதாகவும், இந்த படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியை இயக்குனர் கவுதம்மேனன் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சூர்யாவுடன் மீண்டும் இணைந்து ஒரு படம் இயக்கவுள்ளதாக இயக்குனர் கவுதம் மேனன் அவ்வப்போது பேட்டியில் கூறிக்கொண்டிருந்த நிலையில் 'காக்க காக்க 2' படம் விரைவில் அதை உண்மையாக்கிவிடும் என தெரிகிறது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும், கிரிக்கெட் உலக கடவுள் என கோடிக்கணக்கான ரசிகர்கள்...

ஒரே படத்தில் நான்கு முன்னணி நடிகைகள்

கடந்த 90கள் மற்றும் 2000-இல் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகிகளாக இருந்த நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, ராதிகா மற்றும் ஊர்வசி...

தனுஷின் 'பவர்பாண்டி'யில் ஹீரோவாகும் ரோபோசங்கர்

தனுஷ் முதன்முதலாக இயக்கும் 'பவர்பாண்டி' படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்திலும், பிரசன்னா மற்றும் சாயாசிங் ஆகியோர் பவர்புல் கேரக்டரிலும் நடித்து வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்...

ஆண்டவன் கட்டளை- திரை விமர்சனம்

புத்திசாலியாக இருப்பது நல்லது மட்டுமல்ல, நல்லவனாக இருப்பது புத்திசாலித்தனம் ஆகும்- மகாத்மா காந்தி...

இளையதளபதி 'பைரவா'வின் ஒருசில ரகசியங்கள்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இதுவரை வெளிவராத ஒருசில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது...