இந்தியில் பட்டைய கிளப்பிய அஞ்சான்!

சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் திருப்பதிசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’அஞ்சான்’. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் டிரைலர் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், இந்த படம் குறித்து பேட்டியளித்த இயக்குனர் லிங்குசாமி ’தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்த படத்தில் இறக்கியிருப்பதாக கூறியதும் இந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தியது.

ஆனால் படம் வெளிவந்த ஒரு சில நாட்களில் இந்த படத்திற்கு தொடர்ச்சியாக நெகடிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியதால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுமட்டுமின்றி தமிழ் திரையுலகில் முதல் முதலாக ஒரு படத்தை கிண்டல் செய்து மீம்ஸ் உருவானதும் இந்த படத்தில் இருந்து தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத ‘அஞ்சான்’ திரைப்படத்திற்கு இந்தியில் தற்போது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப்பில் வெளியானது. யூட்யூபில் இந்த திரைப்படத்தை 140 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பதும் இந்த திரைப்படத்தை பதிவு செய்த யூடியூப் சேனலுக்கு 40 மில்லியன் புதிய சப்ஸ்கிரபர்கள் கிடைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத ‘அஞ்சான்’ திரைப்படம் ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More News

சாமிய காப்பாற்ற யார் இருக்கா? பிரபல இயக்குனரின் 3 வயது மகள் கேள்வி

ஒரு காலத்தில் மதமும் ஆன்மீகமும் மனிதனை நல்வழிப்படுத்த இருந்த நிலையில் தற்போது ஆன்மீகம் என்ற பெயரில் மதக் கலவரங்களும், மத பிரச்சனைகளை சீண்டிவிட்டு அரசியல் செய்வதுமான செயல்கள் அதிகம்

குழந்தையில்லா தாய்மார்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்த கொரோனா: ஆச்சரிய தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் மனித இனமே அச்சத்தில் இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு சில நன்மைகளும் நடந்துள்ளன.

கேளம்பாக்கம் செல்ல ரஜினி இ-பாஸ் வாங்கினாரா? சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது மகளின் குடும்பத்தினருடன் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றார் என்பதும், மாஸ்க் அணிந்து லம்போர்கினி

மக்களே உஷாரா இருங்க… இந்தவகை மாஸ்க் எதுக்கும் உதவாது!!! எச்சரிக்கும் மத்தியச் சுகாதாரத்துறை!!

இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

கொரோனாவால் சீரழிந்த கூட்டுக்குடும்பம்!!! 18 பேர் பாதிப்பு மற்றும் தொடரும் அவலம்!!!

மகாராஷ்டிர மாநிலம் பூனே அடுத்த பிரிம்பிஹான் என்ற பகுதியில் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது