என் திருமணம் நடக்க காரணமே சூர்யா குடும்பம்தான்: பிரபல காமெடி நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த 'அயன்' உள்பட பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவருமான ஜெகன், தனது திருமணம் நடக்க காரணமே சூர்யாவின் குடும்பம் தான் என நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகர் ஜெகன், வான்மதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. வான்மதியை காதலித்தபோது வான்மதியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, தங்களது திருமணத்தை சூர்யா நடத்தி வைக்குமாறு கேட்டுகொண்டதாகவும் ஜெகன் கூறியுள்ளார்.
ஜெகனின் காதல் செய்தியை கேட்ட சூர்யா, நிச்சயம் திருமணத்திற்கு நான் வருவேன், ஆனால் பெற்றோர் சம்மதம் இல்லாமல் இந்த திருமணம் நடக்கக்கூடாது என்று சூர்யா கூறினார். பின்னர் நேராக சிவகுமாரிடம் சென்றபோது, நான் இருக்கும்போது நீ ஏன் கவலைப்படுகிறாய்? உன் திருமணம் குறித்து நான் பேசுகிறேன்' என்று கூறி வான்மதியின் பெற்றோரிடம் பேசி எங்கள் திருமணத்திற்கு சம்மதம் பெற்று தந்தார்.
சூர்யாவும், அவருடைய தந்தை சிவகுமார் அவர்களும் தான் எங்கள் திருமணம் நடக்க முழு காரணம் என்று ஜெகன் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com