மார்க்கண்டேய நடிகர் சூர்யாவுக்கு இன்று வயது 18
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் நடிகர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது பழம்பெரும் நடிகர் சிவகுமார். எந்த விதமான கிசுகிசுகளிலும் சிக்காமல் திரையுலகில் கண்ணியமாக வாழ்ந்த ஒருசில நடிகர்களில் ஒருவர். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற பழமொழிக்கேற்ப மார்கண்டேய நடிகருக்கு பிறந்த நடிகர் சூர்யா, தற்போது 40 வயதை தொட்டு இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தாலும் இன்னும் 18 வயது கல்லூரி மாணவரை போல இளமையாக அதே நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கின்றார். ஆம் இன்று சூர்யா திரையுலகில் அடியெடுத்து வைத்து 18 ஆண்டுகள் பூர்த்தி அடைந்த நாள். கடந்த 1997ஆம் ஆண்டு இதே செப்டம்பர் 6ஆம் தேதிதான் சூர்யா நடித்த முதல் படமான 'நேருக்கு நேர்' ரிலீஸ் ஆனது.
ஒரு நடிகருக்கு முதல் படம் என்பது மிகவும் முக்கியமானது. கலைஞர் மு.கருணாநிதியின் வசனத்தில் அறிமுகமான சிவாஜி கணேசன், கே.பாலசந்தரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஆகியோர் அறிமுகமானது போன்று சூர்யாவின் முதல் படத்தை தயாரித்தவர் திரையுலக மேதை என்று அழைக்கக்கூடிய இயக்குனர் மணிரத்னம், அந்த படத்தை இயக்கிய கே.பாலசந்தரிடம் வலது கை போல் இருந்த இயக்குனர் வசந்த், உடன் நடித்தவர் இளையதளபதி விஜய், ஜோடியாக நடித்தவர் பின்னாளில் தமிழ் சினிமா ரசிகர்களை தனது நடிப்பாலும் கவர்ச்சியாலும் கட்டிப்போட்ட சிம்ரன், இத்தனை அம்சங்களும் சூர்யா அறிமுகமான 'நேருக்கு நேர்' படத்தில் அமைந்ததால் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது.
இதற்கு பின்னர் கேப்டன் விஜயகாந்துடன் சூர்யா நடித்த 'பெரியண்ணா', ஜோதிகாவுடன் முதன்முதலாக நடித்த 'பூவெல்லாம் கேட்டுப்பார்', மீண்டும் விஜய்யுடன் நடித்த 'ப்ரெண்ட்ஸ்' ஆகிய வெற்றிப்படங்கள் சூர்யா, தமிழ் சினிமாவில் ஆழமாக காலூன்ற உதவிய படங்கள். இதன் பின்னர் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்த 'பிதாமகன்', அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. சூர்யா ஒரு முழுமையான நடிகராக மாறியது இந்த படத்தில்தான் என்றே சொல்லலாம்.
ரொமான்ஸ் படங்களிலேயே நடித்து கொண்டிருந்த சூர்யாவை ஆக்சன் ஹீரோவாக்கியது கவுதம் மேனன் இயக்கிய 'காக்க காக்க' படம்தான். இந்த படத்தில் முதன்முதலில் போலீஸ் வேடத்தில் நடித்த சூர்யாவுக்கு, கவுதம் மேனனின் ஸ்டைலிஷ் இயக்கத்தின் கெமிஸ்ட்ரி கச்சிதமாக பொருந்தியது. அதன் பின்னர் ஹரியின் இயக்கத்தில் வெளியான ஆக்சன் படங்களான ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 என முழுநேர ஆக்சன் ஹீரோவாகவே மாறினார்.
இதற்கு இடையே சில்லுன்னு ஒரு காதல், வாரணம் ஆயிரம் போன்ற மென்மையான ரொமான்ஸ் படங்களில் நடித்த சூர்யா, தன்னால் எந்தவித கேரக்டரிலும் பளிச்சிட முடியும் என்பதை மெய்ப்பித்தார்.
தன்னுடன் ஏழு படங்கள் ஜோடியாக நடித்த ஜோதிகாவை கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சூர்யாவுக்கு தேவ், தியா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிகராக மட்டும் இருந்த சூர்யா, 2D எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவத்தையும் தொடங்கி தயாரித்த முதல் படம் '36 வயதினிலே'. இந்த படத்தில் ஜோதிகா எட்டு வருடங்களுக்கு பின்னர் ரீஎண்ட்ரி ஆனால் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கொடுத்த வெற்றியின் காரணமாக அவர் தற்போது 'பசங்க 2' மற்றும் '24' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த 18 வருடங்களில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சூர்யா, இன்னும் ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் மென்மேலும் புகழ்பெற இந்த நாளில் அவரை மீண்டும் வாழ்த்துகிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com