விபச்சாரம் பண்ற நாய்ங்களா, முடிஞ்சா என்ன தொட்டுப்பாரு....! சூர்யா, சிக்காவிற்கு மிரட்டல் விட்ட பெண்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
டிக்டாக் மற்றும் யுடியூபில் ஆபாசமாக பேசியே பிரபலமானவர்கள் ஏராளம். தனக்கு கெட்டபேர் வந்தாலும் சரி, யார் நம்மை பற்றி கேவலமாக கமெண்டுகளை பதிவிட்டாலும் சரி, பிரபலம் அடைவது தான் முக்கியம் என்று நினைத்து சிலர் பேர் செய்யும் அசிங்கமான வேலைகள், இன்றைய இளைய தலைமுறையையும் முகம் சுழிக்க செய்கிறது. அட்வைஸ் கூறும் நபர்களையும் ஆபாசமாக பேசி, அவர்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் தவறாக சித்தரிக்கும் கொடூர எண்ணம் சில பிரபல பைத்தியங்களை விட்டு இன்னும் போகவில்லை.
டிக்டாக் தடைசெய்யப்பட்டது முதல், இந்த பிரபல(நெகடிவ்) பைத்தியங்கள் சமூகவலைதளங்களில் செய்யும் அட்ராசிட்டி தாங்க முடியவில்லை. யுடியூப் தளத்தை, குழாய் அடி சண்டையாக பயன்படுத்திக்கொண்ட இவர்கள், கெட்ட வார்த்தை பேசி பிரபலமாவதையும், ஆபாச நடனங்கள் ஆடி சம்பாரிப்பதையும் தொழிலாக வைத்துள்ளார்கள்.
அந்த வகையில் நடிகை வனிதாவின் 4-ஆவது திருமணம் குறித்து பேசி மிகவும் பிரபலமானவர் தான் சூர்யா தேவி. இதே போல் தன்னை தானே அழகு என பெருமையடித்துக்கொள்ளும், சர்ச்சை பெண் தான் ரவுடி பேபி சூர்யா என்கிற சுப்புலட்சுமி. தன்னுடைய கள்ளக்காதலன் சிக்கா-வுடன் சேர்ந்து, இந்த ஜோடி செய்யும் அட்ராசிட்டி, ஆபாசத்தின் உச்சம் என்றே சொல்லலாம். குழந்தைகளை வைத்துக்கொண்டு சில அசிங்கங்களை செய்வார்கள். சமீபத்தில் சிக்காவை சூர்யாதேவி, தன் அண்ணனுடன் சேர்ந்து செருப்பால் அடித்த வீடியோ வைரலானது. இதன்பின் இவர் யுடியூப்பில் சிக்காவிற்கு மிரட்டல் விடுவது போல" போலீஸ், கோர்ட் பத்தி எல்லாம் பேசிவிட்டு, சிக்கா, சூர்யாவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார் சூர்யாதேவி.
அதில் "நான் செருப்பால் அடிச்ச பிறகும் உயிரோடு இருக்க நாயே, சிக்கா நீ ஒரு டம்மி பீஸ். சமூக வலைத்தளங்களில் விபச்சாரம் பண்ற நாய்ங்களா, உங்களுக்கு வெட்கமா இல்லையா. சூர்யா நீ இன்னும் திருத்தல, கடவுள் உன்ன தண்டிப்பார். சுப்பிரமணியபுரத்தில் ஆம்பளைங்க யாராச்சும் இருந்தீங்கன்னா..சிக்காவை ரோட்ல பார்த்தா விரட்டி விரட்டி அடிங்க.. யாராச்சும் தற்கொலை பண்ணிக்கணும் நெனச்சா, இவங்கள பார்த்து மனசு மாறிக்கோங்க, இவங்களே உயிரோட இருக்காங்கள்ள. கூடிய சீக்கிரம் ஆதாரங்களை ரிலீஸ் பண்றேன் " என்று இன்னும் பல கெட்ட வார்த்தைகள் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சூர்யா தேவி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments