சென்னை படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா

  • IndiaGlitz, [Saturday,June 11 2016]

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 600028' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது அவர் இயக்கி வருகிறார். முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நட்சத்திரங்கள் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து தற்போது சூர்யா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சூர்யாவை யாரும் இதுவரை அணுகவில்லை என்றும் இந்த படம் உள்பட சூர்யா தற்போது எந்த படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவில்லை என்றும் சூர்யா தரப்பு விளக்கியுள்ளது. இந்த விளக்கத்தின் மூலம் இதுவரை வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.