கௌதம் மேனனுக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா! ஏன் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு ’மின்னலே’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர், 20 ஆண்டுகள் திரையுலகில் ஜொலித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் கௌதம் மேனனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதன் முதலாக 1998 அன்று கௌதம் மேனனை தான் சந்தித்து ’காக்க காக்க’ கதையை கேட்டது’ம் மறக்க முடியாத அனுபவம் என்றும் அவர் இயக்கிய ’காக்க காக்க’ மற்றும் ’வாரணம் ஆயிரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் எனது வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படங்கள் என்றும் அவர் கூறினார்
மேலும் ஒவ்வொரு இயக்குனர்களும் தங்களது திரைக்கதையில் பாடல்களை விட்டு விடுவார்கள் என்றும் ஆனால் கௌதம் மேனன் தனது திரைக்கதையில் பாடல்களின் வரிகளை குறிப்பிட்டு ஒவ்வொரு வரிகளையும் எவ்வாறு காட்சியாக அமைக்கப் போகிறோம் என்று குறிப்பிட்டு இருப்பார் என்றும் அதை பார்த்து தான் ஆச்சரியம் அடைந்ததாக கூறினார்
அதேபோல் காக்க காக்க படத்தில் இடம்பெற்ற உயிரின் உயிரே பாடலையும் வாரணம் ஆயிரம் படத்தின் இடம்பெற்ற பாடலையும் பலநூறு முறை தான் கேட்டு இருப்பதாகவும் வாரணம் ஆயிரம் படம் வெளிவந்தபோது பலரை கிடார் வைத்து கொண்டு அலைந்தார்கள் என்றும் தானும் ஒரு கிட்டார் எடுத்துக்கொண்டு அந்த பாட்டை பாடும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறினார்
கௌதம் மேனனுடன் இணைந்து பணியாற்றிய இரண்டு படங்களும் தனக்கு ஒரு மலரும் நினைவுகள் என்றும் சூர்யா அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
• @Suriya_Offl Shares About @Menongautham Upon His Completion Of 20 Years In Industry | pic.twitter.com/QGntQa710m
— Suriya Fans Team ™ (@SuriyaFansTeam) January 31, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments