சூர்யாவின் 'என்.ஜி.கே' முக்கிய அப்டேட்!
- IndiaGlitz, [Saturday,March 23 2019]
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே' திரைப்படம் கடந்த ஆண்டே வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் இந்த படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி கொண்டே வருகிறது. சூர்யாவின் ரசிகர்கள் பொறுமை இழந்து இந்த படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு தயாரிப்பாளரிடம் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் 'என்.ஜி.கே. குறித்த புதிய அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் சூர்யா தன்னுடைய கேரக்டருக்கான பகுதிக்கு டப்பிங் செய்ய தொடங்கிவிட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் டப்பிங்கை முடித்துவிடுவார் என்றும், அதன்பின் சில நாட்களில் இந்த படம் சென்சாருக்கு செல்லவுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது
யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.