எம்.எல்.ஏ ஆகிறார் நடிகர் சூர்யா

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே. திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சமீபத்தில் தொடங்கி இரவுபகலாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படம் ஏற்கனவே ஒரு அரசியல் த்ரில்லர் படம் என்ற செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் சூர்யாவின் கேரக்டர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

சூர்யா இந்த படத்தில் நந்தகோபாலகுமரன் என்ற கேரக்டரில் எம்.எல்.ஏவாக நடித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தை தீபாவளி அன்று திரையிட திட்டமிட்டு முழுவேகத்தில் இயக்குனர் செல்வராகவன் செயல்பட்டு வருவதாகவும், சூர்யாவின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த படம் தீபாவளி அன்று வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா, ரகுல்ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ட்ரிம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், ப்ரவீண் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படத்துடன் நடிகர் சூர்யா, இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது